மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் நெல்லை பாலுவிற்கு

சிறந்த சமூக சேவகருக்கானஅறம் விருது* *நடிகர் சதீஷ் வழங்கினார்*;

Update: 2024-08-25 09:26 GMT
* மதுரையின் அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலுவின் சமூகப் பணியினை பாராட்டி சென்னையில் நடைபெற்ற விழாவில் அறம் விருதினை நடிகர் சதீஷ் வழங்கினார் இது பற்றிய விவரம் வருமாறு அட்சய பாத்திரம் நெல்லை பாலு மதுரையில் ரோட்டோரத்தில் உள்ள வறியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா இரண்டாவது அலையின் தொடக்கத்தில் இருந்து கடந்த 1200 நாட்களாக தினமும் 300 பேருக்கு மதிய உணவு அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலுவின் முயற்சியால் வழங்கப்பட்டு வருகிறது.
Advertisement
அறம் விருது* சென்னை அறம் செய்ய விரும்பு அறக்கட்டளை சார்பில் பல்வேறு துறையில் சாதனை படைத்தவர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னை நாரத கான சபாவில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நீதியின் குரல் பாஸ்கரன் தலைமை தாங்கினார். அறக்கட்டளை நிர்வாகி நல்லமணி வரவேற்புரை ஆற்றினார். நடிகர் சதீஷ் விழாவில் திரைப்பட நடிகர் சதீஷ் பங்கேற்று மதுரை அட்சய பாத்திரம் ட்ரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலுவிற்கு சிறந்த சமூக சேவகருக்கான அறம் விருதினையும் கேடயத்தையும் வழங்கி பாராட்டினார். விழாவில் பல்வேறு துறை சாதனையாளர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

Similar News