லக்ஷ்மி அம்மன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா கொண்டாட்டம்
பொன்னேரி அருகே லக்ஷ்மி அம்மன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி கிருஷ்ணர் ராதை வேடமணிந்தும் கேக் வெட்டியும் பரிசுகள் வழங்கியும் உறியடித்து கொண்டாடினர்
பொன்னேரி அருகே லக்ஷ்மி அம்மன் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி கிருஷ்ணர் ராதை வேடமணிந்தும் கேக் வெட்டியும் பரிசுகள் வழங்கியும் உறியடித்து கொண்டாடினர் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் தடபெரும் பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ லஷ்மி அம்மன் ஆலயத்தில் கிருஷ்ண ஜெயந்தி விழாவை முன்னிட்டு கிருஷ்ணர் ராதை வேடமணிந்து பல்வேறு கலை நிகழ்ச்சிகளை சிறுவர்கள் நடத்தினர் பின்னர் மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி உறியடி நிகழ்வுடன் கிருஷ்ணர் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலம் சிறப்பாக நடைபெற்றது. பின்னர் கிருஷ்ண ஜெயந்தியை ஒட்டி இனிப்பு பல வகைகள் உள்ளிட்ட சீர் வைகளை சுமந்து வந்து கேக் வெட்டியும் பக்தர்களுக்கு வழங்கி கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடினர். சிறுவர் முதல் இளைஞர் வரை பலர் கிருஷ்ணர் ராதை வேடமிட்டு கிருஷ்ணருக்கு மயில் தோகையால் விசிறி பக்தியுடன் கிருஷ்ணரை வழிபாடு செய்தனர் .