ரங்கநாதபுரம் துணை மின் நிலையத்தில் மின்தடை அறிவிப்பு

ரங்கநாதபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை மின்தடை

Update: 2024-08-28 04:53 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள ரங்கநாதபுரம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் வேலை நடைபெற உள்ளதால் 28 ஆம் தேதி புதன்கிழமை மின்தடை அறிவிப்பு. காலை 9:00 மணி முதல் மாலை 4 மணி வரை சரளப்பட்டி, காசிபாளையம், மேட்டுப்பட்டி, விஜி புதூர், வெள்ளையன் பட்டி, கே ஜி பட்டி, எல்லப்பட்டி, கல்வார்பட்டி, கோலார்பட்டி, கல்லுப்பட்டி, ராஜா கவுண்டனூர், விருதலைபட்டி, சீதப்பட்டி, பூதிபுரம், நல்ல பொம்மன்பட்டி, கோட்டூர், கன்னிமார் பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் முத்துபாண்டியன் அறிவித்துள்ளார்.

Similar News