தொலைந்து போன 100 செல்போன்கள் கண்டுபிடித்த காவல்துறை.
தொலைந்து போன செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த காவல் கண்காணிப்பாளர்.
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த காணாமல் போன செல்போன்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட செல்போன் தொலைந்து போன வழக்குகளை விசாரித்து மாவட்ட சைபர் கிரைம் போலீசார் தொலைந்து போன 100 செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைத்தனர். இந்த நிகழ்வு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது 100 செல்போன்கள் உரிமையாளர்கள் நேரில் வந்து தொலைந்து போன செல்போன்களை பெற்றுக் கொண்டனர்.