கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் , மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்குவதற்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நடந்தது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் சுப்ரமணி தலைமை தாங்கினார். அரசு எலும்பு முறிவு மருத்துவர் வெங்கடேஷ், காது, மூக்கு, தொண்டை மருத்துவர் வாசவி, மனநல மருத்துவர் உஷாநந்தினி, கண் மருத்துவர் லோகநாயகி உள்ளிட்டோர் கொண்ட மருத்துவ குழுவினர் மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்தனர். முகாமில் 82 பேர்களுக்கு மருத்துவ சான்றுடன் கூடிய யுடிஐடி எனும் பதிவு எண்ணுடன் கூடிய தேசிய அடையாள அட்டை வழங்கப்பட்டது.