கோவை: திமுக ஆட்சியை அகற்றும் வரை காலனிகள் அணிய மாட்டேன் !

பாதிக்கப்பட்ட பெண் அடையாளத்தை வெளியிட்டது வெட்கக்கேடானது என்று கூறி, திமுக ஆட்சியை அகற்றும் வரை காலனிகள் அணிய மாட்டேன் என கோவையில் அண்ணாமலை சபதம் எடுத்துள்ளார்.

Update: 2024-12-27 04:05 GMT
கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நிருபர்களுக்கு நேற்று மாலை பேட்டி கொடுத்தார். அப்போது அவர் பேசும்போது, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூர சம்பவத்திற்கு பாஜக கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. பெண் குழந்தைகள் தமிழகத்தில் பாதுகாப்பாக இல்லை என்பது இந்த சம்பவம் மூலம் உறுதியாகி உள்ளது. இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளி என்னை பொருத்தவரை திமுகவில் பொறுப்பில் இருக்கக்கூடிய ஒருவர்தான். அதைப்போல் மாணவி குற்றம் செய்ததைப் போல் காட்டி இருப்பதால், முதல் தகவல் அறிக்கை எழுதியதற்கு போலீசார் வெட்கப்பட வேண்டும் என்றும், தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்றும் வரை நான் காலணிகள் அணிய மாட்டேன். 48 நாட்களுக்கு விரதம் இருக்கப் போகிறேன். தமிழகத்தில் உள்ள அறுபடைமுருகன் கோவில்களுக்கு சென்று முறையிட போகிறேன் என்று ஆக்ரோஷமாக தன்னுடைய காலணிகளை கழட்டி சபதம் எடுத்துள்ளார் அண்ணாமலை.

Similar News