ஜேசிஐ ராசிபுரம் மெட்ரோ எட்டாம் ஆண்டு பதவியேற்பு விழா

ஜேசிஐ ராசிபுரம் மெட்ரோ எட்டாம் ஆண்டு பதவியேற்பு விழா

Update: 2024-12-26 13:40 GMT
ஜே.சி.ஐ ராசிபுரம் மெட்ரோ எட்டாம் ஆண்டு பதவியேற்பு விழா நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் போடிநாயக்கன்பட்டி விக்னேஷ் மஹாலில் நடைபெற்றது. இவ்விழாவில் 2025 ஆம் ஆண்டு புதிய தலைவராக மணிமேகலை தமிழரசன், செயலாளராக கவின் மாறன், பொருளாளராக கார்த்திகேயன், தேர்வு செய்யப்பட்டனர். இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக என். முத்துசாமி சிறப்பு விருந்தினராக எஸ் எம் ஆர் பஸ் உரிமையாளர் குமரேசன், மற்றும் 2025 ஆம் ஆண்டு மண்டல தலைவர் மணிகண்டன், மண்டல பொறுப்புத் தலைவர் கர்ணா மித்ரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் சாசன தலைவர் சசிரேகா சதீஸ்குமார் மற்றும் முன்னாள் தலைவர்கள் பூபதி, முன்னாள் மண்டல தலைவர் நிலாமணி, கணேசன், சுகன்யா ,உடனடி முன்னாள் தலைவர் சதீஷ்குமார், மற்றும் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டனர். இவியக்கத்தில் புதியதாக 15 பேர் இணைந்து கொண்டனர். நிகழ்வில் பயனாளிக்கு தையல் இயந்திரம் மற்றும் சாலையோரம் தங்குபவர்களுக்கு பெட்ஜீட் போன்ற நன்கொடைகள் வழங்கப்பட்டன. மேலும் இவ்விழாவில் இளம் தொழிலதிபர்கள் பொறியாளர்கள் சிறு குறு தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர்.

Similar News