சேலத்தில் நாளை மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி

இரண்டு அமைச்சர்கள் பங்கேற்பு

Update: 2024-12-27 03:25 GMT
சேலம் மாவட்ட கலெக்டர் பிருந்தாதேவி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:- சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி சமுதாய கூடத்தில் மாநில அளவிலான கைத்தறி கண்காட்சி நாளை (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இந்த கண்காட்சியை சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். இந்த விழாவில் கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்த்துறை அரசு முதன்மைசெயலாளர், கைத்தறி துறை இயக்குனர், மாநகராட்சி மேயர், எம்.பி.க்கள், கவுன்சிலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு கைத்தறி துறை மூலம் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சார்ந்த கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்படும் பிரசித்தி பெற்ற கைத்தறி ஜவுளி ரகங்களை பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தி விற்பனை செய்யப்படும் வகையில் இந்த கைத்தறி கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கண்காட்சியில் 30 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. கண்காட்சி வருகிற 11-ந் தேதி வரை நடக்கிறது. இதனை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Similar News