டிஎன்பிஸ்சி முதன்மை தேர்வுக்கு நேரடி இலவசபயிற்சி
டிஎன்பிஸ்சி முதன்மை தேர்வுக்கு நேரடி இலவசப் பயிற்சி வகுப்புகள் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தகவல்
திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், தன்னார்வப் பயிலும் வட்டம் மூலமாக அரசுப் பணிக்காலியிடங்களுக்கான போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் வேலைநாடுநர்களுக்கு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் 2024-ஆம் ஆண்டிற்கான டிஎன்பிஸ்சி TNPSC Group-II/IIA -தேர்விற்கான அறிவிப்பு 20.06.2024 அன்று வெளியிடப்பட்டது. இத்தேர்விற்கான முதல்நிலைத் தேர்வு 14.09.2024 அன்று நடத்தி முடிக்கப்பட்டு, தற்போது 12.12.2024 அன்று முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அதனைத்தொடர்ந்து TNPSC Group- II/IIA முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சிப் பெற்றவர்களுக்கு முதன்மை தேர்வுக்கு நேரடி இலவசப் பயிற்சி வகுப்புகள் திண்டுக்கல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் 03.10.2024 அன்று முதல் துவங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. இப்பயிற்சியானது திறன்மிக்க வல்லுநர்களைக் கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. மேலும் மாதிரித் தேர்வுகளும் இலவசமாக நடத்தப்பட உள்ளன. எனவே, போட்டித் தேர்விற்குத் தயாராகும் மாணவ, மாணவிகள் இந்த அரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளலாம். அவ்வாறு விருப்பமுள்ளவர்கள் இவ்வலுவலகத்தை நேரடியாகத் தொடர்பு கொண்டு தங்களது விவரங்களைப் பதிவு செய்து இப்பயிற்சி வகுப்பில் சேர்ந்து பயன்பெறலாம், என திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் பூங்கொடி தெரிவித்துள்ளார்.