செல்வபுரம்: மது வாங்கி தராத நண்பரை குத்திய 3 பேர் கைது !
மது வாங்கி தர முடியாது என்று கூறிய நண்பனை ஆத்திரத்தில் மூவர் கத்தியால் குத்தியுள்ளனர்.
கோவை செல்வபுரம் அம்மன் இந்திரா நகரை சேர்ந்த கார்த்திக் (வயது 24), அவரது நண்பர்கள் சந்தானம், தினேஷ், தீபக் ஆகியோர் நேற்று இரவு மது அருந்தியுள்ளனர். இனிமேல் மது வாங்கி தர முடியாது என்று கார்த்திக் கூறியதால் ஆத்திரமடைந்த சந்தானம், தினேஷ், தீபக் ஆகியோர் கார்த்திக்கை கத்தியால் குத்தியுள்ளனர்.காயமடைந்த கார்த்திக் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்து செல்வபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சந்தானம், தினேஷ், தீபக் ஆகிய 3 பேரை கைது செய்துள்ளனர். இது குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.