தாமரைகுளம் பதியில் இன்று  திருக்கல்யாண விழா 

கன்னியாகுமரி

Update: 2024-12-27 03:18 GMT
குமரி மாவட்டம் தென்தாமரைகுளத்தில் அமைந்துள்ள  அகிலத்திரட்டு அம்மானை அருளிய மூலப்பதியான தாமரைகுளம் பதியில் திருஏடு வாசிப்பு திருவிழா 29-ம் தேதி வரை நடக்கிறது.       12-வது நாளான இன்று வெள்ளிக்கிழமை காலை 6 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை,மாலை 4 மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை,5 மணிக்கு அய்யாவுக்கு திருகல்யாண வைபோக திரு ஏடுவாசிப்பு,இரவு 8 மணிக்கு மணவறை வாகனத்தில் பதிவலம் வருதல், 9மணிக்கு அன்னதர்மம் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது         13-வது நாள் திருஏடு வாசிப்பு விழாவான  நாளை சனிக்கிழமை,காலை 6 மணிக்குஅய்யாவுக்கு பணிவிடை மாலை 4 மணிக்குஅய்யாவுக்கு பணிவிடை 4.10 மணிக்கு பகவதி, பார்வதி, மண்டைக்காட்டம்மை திருமண வைபோகம். திரு ஏடுவாசிப்பும்நடக்கிறது,இரவு 8 மணிக்கு அய்யா தொட்டில் வாகனத்தில் பதிவலம் வருதல்,இரவு 9மணிக்கு அன்னதர்மம் வழங்குதலும் நடக்கிறது       14-வது நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 6. மணிக்கு அய்யாவுக்கு பணிவிடை,நண்பகல் 12. மணிக்கு அய்யாவுக்கு உச்சிப்படிப்பு, பால்தர்மம்,மாலை 4 மணிக்குஅய்யாவுக்கு பணிவிடையும் மாலை 4.10 மணிக்கு பூமடந்தை திருக்கல்யாண வைபோகம், பட்டாபிஷேகம், திருஏடுவாசிப்பும் இரவு 8 மணிக்கு அய்யா செங்கருட வாகனத்தில் தெருவீதி பவனி வருதல்,இரவு 9 மணிக்கு அன்னதர்மம் வழங்குதலுடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை தக்கார், பரம்பரை குருமார்கள்மற்றும் அய்யாவின் அன்புக்கொடி மக்கள்  செய்து வருகின்றனர்.

Similar News