ராணிப்பேட்டை விரைவு சைக்கிள் போட்டி-ஆட்சியர் அறிவிப்பு!
அண்ணா பிறந்த நாளை ஒட்டி விரைவு சைக்கிள் போட்டி!
பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை சிறப்பிக்கும் வகையில் தமிழக அரசு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் விரைவு சைக்கிள் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ராணிப்பேட்டை மாவட்டத்தில் வருகிற ஜனவரி மாதம் 4-ந் தேதி காலை 6 மணியளவில் போட்டிகள் நடைபெற உள்ளது. 13 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும், மாணவிகளுக்கு 10 கிலோ மீட்டர் தூரமும், 15 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டர் தூரமும், மாணவி களுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும், 17 வயதுக்கு உட்பட்ட மாணவர்களுக்கு 20 கிலோ மீட்டர் தூரமும், மாணவிகளுக்கு 15 கிலோ மீட்டர் தூரமும் போட்டி நடத்தப்படுகிறது. வெற்றி பெறுபவர்களுக்கு சான்றிதழ்களுடன் முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரம், நான்கு முதல் 10 இடம் வருபவர்களுக்கு தலா ரூ.250 வழங்கப்பட உள்ளது. போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் பள்ளியிலிருந்து வயது சான்றிதழ் பெற்று வரவேண்டும். இந்தியாவில் தயாரான சாதாரண சைக்கிள்களையே பயன்படுத்த வேண்டும்.பரிசுத்தொகை காசோலையாக வழங்கப்படுவதால் போட்டியில் பங்கேற்பவர்கள் தங்களுடைய வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் கார்டு நகல் கொண்டுவர வேண்டும்.