ஊத்தங்கரை அருகே அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிட சிமெண்ட் பூச்சு காரை பெயர்ந்து விழுந்த சம்பவம் அதிகாரி தற்காலிக பணிநீக்கம்

ஊத்தங்கரை அருகே அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிட சிமெண்ட் பூச்சு காரை பெயர்ந்து விழுந்த சம்பவம் அதிகாரி தற்காலிக பணிநீக்கம்

Update: 2024-08-29 12:29 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஊத்தங்கரை அருகே அரசு மேல்நிலைப்பள்ளி கட்டிட சிமெண்ட் பூச்சு காரை பெயர்ந்து விழுந்த சம்பவம் அதிகாரி தற்காலிக பணிநீக்கம் ஊத்தங்கரை அருகே அரசு மேல்நிலைப் பள்ளி கட்டிட சிமெண்ட் பூச்சி பெயர்ந்து விழுந்தது தொடர்பாக சம்பந்தப்பட்ட உதவி பொறியாளரை தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரிய தள்ளப்பாடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 27.8.2024 அன்று காலை சுமார் 8.45 மணி அளவில் இரண்டு வகுப்பறை கட்டிடத்தின் மேற்கூரை அடித்தள பூச்சு பெயர்ந்து விழுந்து மூன்று மாணவர்கள் காயம் அடைந்தனர். இது தொடர்பாகதொடர்பாக சம்பந்தப்பட்ட உதவி பொறியாளர் அருண் ராஜ் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டார். ( செயற்பொறியாளர் தற்பொழுது பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றி வருகிறார்) கட்டிடப் பணி மேற்கொண்ட ஒப்பந்ததாரர் இனிவரும் காலங்களில் பணிகள் ஏதும் மேற்கொள்ளா வண்ணம் பெயரினை கருப்பு பட்டியலில் சேர்த்தும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Similar News