ஊத்தங்கரை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம்
ஊத்தங்கரை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம்
ஊத்தங்கரை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம் ஊத்தங்கரை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது. கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் தியாகராஜன் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் விஜயன் ரத்ததான முகாமை துவக்கி வைத்தார். கிருஷ்ணகிரி, இந்தியன் ரெட் கிராஸ் சங்க தலைவர் செபஸ்டியன், செயலளார் செந்தில்குமார் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். சிங்காரப்பேட்டை, வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் அன்பரசி, குணசேகரன், ஊத்தங்கரை ரெட் கிராஸ் சங்க நிர்வாகிகள் ராஜா, ரஜினி சங்கர், ஆகியோர் கலந்து கொண்டனர். 53 தன்னார்வ மாணவர்கள், ஆசிரியர்கள் ரத்ததானம் வழங்கினர் .பெறப்பட்ட ரத்தம் கிருஷ்ணகிரி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் அனைத்து துறைத் தலைவர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், மருத்துவ பணியாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை வேதியியல் விரிவுரையாளர் லோகேஷ் குமார் ஏற்படுத்தினார். ஊத்தங்கரை இந்தியன் ரெட் கிராஸ் சங்க செயலளார் நேசம் குணசேகரன் நன்றி கூறினார்.