ஆபத்தை உணராமல் பேருந்தில் தொங்கியபடி பயணம் செய்யும் மாணவர்கள்

கெத்துக்கு பேருந்தின் ஜன்னல் கம்பியின் மீது ஏறி கலாட்டாவில் ஈடுபட்ட பள்ளி மாணவர்களால் பேருந்து பயணிகள் அவதி ஆபத்தை உணராமல் தினமும் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வதால் விபத்து ஏற்படும் அபாயம்

Update: 2024-08-29 16:48 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கெத்துக்கு பேருந்தின் ஜன்னல் கம்பியின் மீது ஏறி கலாட்டாவில் ஈடுபட்ட பள்ளி மாணவர்களால் பேருந்து பயணிகள் அவதி ஆபத்தை உணராமல் தினமும் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியபடி பயணம் செய்வதால் விபத்து ஏற்படும் அபாயம் திருவள்ளூர் மாவட்டம் கும்முடிப்பூண்டி கவரப்பேட்டை உள்ளிட்ட பள்ளிகளிலும் பொன்னேரி, சென்னையில் உள்ள கல்லூரிகளிலும் படித்து வரும் பள்ளி கல்லூரிகளிளும் படித்து வரும் மாணவர்கள் ஆந்திர மாநிலம் சத்தியவேடு, மாதர்பாக்கம், ஈகுவார்பாளையம், பெத்திக்குப்பம் வழியாக வரக்கூடிய 112- P என்ற வழித்தட அரசு பேருந்து வாயிலாக பள்ளி கல்லூரிக்கு குறித்த நேரத்தில் சென்று வருகின்றனர். இந்தப் பேருந்து பள்ளி கல்லூரி மாணவர்கள் சென்று வரும் வகையில் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் அந்தப் பேருந்தில் பயணிக்கும் சில மாணவர்கள் பந்தா காட்டும் வகையில் பேருந்தின் படிக்கட்டில் தொங்கியவாறு ம் பேருந்தின் மேற்கூரை மீது ஏறியும் உயிருக்கு ஆபத்தான நிலையில் பயணம் செய்தபடி கெத்து என்ற பெயரில் சாகசம் நிகழ்த்தி வருகின்றனர். அதேபோல் கால்களை சாலையில் தேய்த்தபடியும், தாளம் போட்டபடி காது கூசும் பாடல்களையும் பாடி வருகின்றனர் இதனால் பள்ளி, கல்லூரி மாணவிகளும், பேருந்து பயணிகளும் மிகுந்த இண்ணலுக்கு ஆளாகி வருகின்றனர். மாணவர்களின் இந்த செயல் பேருந்து பயணிகளை பெரும் அவதிக்கு உள்ளாக்குகிறது இதுகுறித்து காவல்துறை அதிகாரிகளும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுக்க பேருந்து பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Similar News