திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் வட்டம் கூட்டப்புளி மீனவ கிராமத்தில் 48.50 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு மற்றும் மீன் இறங்கு தளம் அமைக்கும் கட்டுமான பணி தொடக்க விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி, சபாநாயகர் அப்பாவு, மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு பணியை தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் வி.எஸ்.ஆர் ஜெகதீஷ், பங்குத்தந்தை ஆல்பின் லியோன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.