பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு கூட்டம்

கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு நிர்வாகிகள் உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்

Update: 2024-08-31 15:48 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பள்ளி மேலாண்மைக் குழு மறு கட்டமைப்பு கூட்டம், எசனை வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி நடைபெற்றது..,... பெரம்பலூர் மாவட்டம் எசனை வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு மறு கட்டமைப்பு கூட்டம் இன்று நடைபெற்றது, இக்கூட்டத்தில் பள்ளி மேலாண்மை குழு தலைவர் துணைத் தலைவர் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆசிரியர் பிரதிநிதிகள் உறுப்பினர்கள் இல்லம் தேடி கல்வி தன்னார்வலர் சுய உதவி குழு உறுப்பினர் முன்னாள் மாணவ உறுப்பினர்கள் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுகாவானந்தம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் ஜெய்சங்கர் கலந்து கொண்டு பள்ளி மேலாண்மை குழு செயல்பாடுகள் குறித்து எடுத்துரைத்தனர், மேலும் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் அனைத்து உறுப்பினர்களுக்கும் சான்றிதழ் வழங்கியும் கௌரவித்தனர். இதில் மேலும் வட்டார வள மைய மேற்பார்வையாளர் தேவகி பார்வையாளராக கலந்து கொண்டார். தேர்வு செய்யப்பட்ட அனைத்து உறுப்பினர்களும் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.

Similar News