பெரம்பலூரில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது குறித்து, விழாக் குழுவினருடன் ஆலோசனை கூட்டம்

பெரம்பலூர் மாவட்ட காவல்துறை சார்பில் கூட்டம் நடைபெற்றது

Update: 2024-08-31 15:51 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பெரம்பலூரில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது குறித்து, விழாக் குழுவினருடன் ஆலோசனை கூட்டம் காவல்துறை சார்பில் நடைபெற்றது ..... செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ள நிலையில், பெரம்பலூர் பாலக்கரை பகுதியில் உள்ள தனியார் அரங்கில் காவல்துறை சார்பில், விநாயகர் சதுர்த்தி அன்று ஊர்வலம் நடத்துவது சம்பந்தமான நடவடிக்கை குறித்து, விநாயகர் சதுர்த்தி விழா குழு நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற்றது, இக்கூட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடுவது அதனை எவ்வாறு எடுத்துச் சென்று தண்ணீரில் கரைப்பது உள்ளிட்ட விஷயங்கள் கடைபிடிக்க வேண்டிய, காவல்துறை வழிமுறையில் குறித்த எடுத்துரைக்கப்பட்டன மேலும் பாதுகாப்பாக விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுவது குறித்தும் விழா குழுவினருக்கு எடுத்துரைத்தனர். பெரம்பலூர் சரக மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் ஆரோக்கியராஜ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பெரம்பலூர் நகர காவல் நிலைய ஆய்வாளர் சதீஷ்குமார் உள்ளிட்ட உதவி காவல் ஆய்வாளர்கள் காவலர்கள், பெரம்பலூர் மாவட்டத்தில், பல்வேறு கிராமத்தை சேர்ந்த விநாயகர் சதுர்த்தி விழா குழுவினர் பலர் கலந்து கொண்டனர்.

Similar News