பொன்னமராவதியில் வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருந்ததை தந்தை கண்டித்ததால் இளைஞர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். பொன்னமராவதி இந்திரா நகரில் வசிப்பவர் பாண்டியன். தள்ளு வண்டியில் சுண்டல் வியாபாரம் செய்துவரும் இவருக்கு தனலெட்சுமி என்ற மனைவியும், ரவிக்குமார்(19) உள்ளிட்ட மூன்று மகன்கள்.இந்நிலையில், பொன்னமராவதியில் உள்ள கறிக்கடையில் ரவிக்குமார் வேலை பார்த்து வந்த நிலையில் சரிவர வேலைக்குச் செல்லாததால், அவரது தந்தை அவரைக் கண்டித்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவறிந்த பொன்னமராவதி போலீஸார் உடலை மீட்டு வலையபட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.