மின்வெட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நள்ளிரவில் மின்வாரிய அலுவலகம் முற்றுகை
மின்வெட்டால் பாதிக்கப்பட்ட மக்கள் நள்ளிரவில் மின்வாரிய அலுவலகம் முற்றுகை
ஊத்துக்கோட்டை பேரூராட்சியில், முக்கிய அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் உள்ளன. அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 5,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் கல்வி கற்கின்றனர். சில தினங்களாக, முன் அறிவிப்பு ஏதுமின்றி அடிக்கடி மின் வெட்டால் ஏற்படுகிறது.இதனால் பொதுமக்கள், மாணவர்கள், குறிப்பாக பெரியவர்கள் கடும் அவதிப்படுகின்றனர். மின்வெட்டு குறித்து ஊத்துக்கோட்டை மின்வாரிய அலுவலகத்திற்கு, தொலைபேசியில் தொடர்பு கொண்டால், எவ்வித பதிலும் இல்லை.ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனை அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளில், ஒரு வாரமாக மின்வினியோகம் சரியாக இல்லை. இதனால், இரவு நேரங்களில், புழுக்கத்தில் இப்பகுதி மக்கள், கடும் அவதிப்படுகின்றனர்.இது குறித்து மின்வாரிய அலுவலகத்திற்கு புகார் கொடுத்தும், எவ்வித பயனும் இல்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள், நேற்று முன்தினம் நள்ளிரவு, மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.