மணலி, ராஜேந்திர பிரசாத் தெருவைச் சேர்ந்த சிவேஷ், 16. கொளத்துார் எவர்வின் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1 படிக்கிறார். இவர், 'ஸ்கூல் கேம்ஸ் பெடரேஷன் ஆப் இந்தியா' சார்பில், காரைக்குடி, அமராவதி புதுாரில், செப்., 26ல் நடந்த மாநில அளவிலான கராத்தே போட்டியில், குமிதே பிரிவில் பங்கேற்றார். மாநிலம் முழுதும், 236 பேர் பங்கேற்றனர். இதில், சிவேஷ் அபாரமாக விளையாடி, தேசிய அளவிலான போட்டிக்கு தேர்வானார். தேசிய அளவிலான போட்டி, புதுடெல்லி, தியாகராஜன் விளையாட்டு அரங்கில், டிச., 10ல் நடந்தது. இதில், 17 பேர் பங்கேற்றனர். இப்போட்டியில், சிவேஷ் மூன்றாமிடம் பிடித்து வெண்கல பதக்கம் வென்றார். வெற்றி பெற்ற அவருக்கு, 1.25 லட்ச ரூபாய் பரிசு தொகை கிடைக்கும். தேசிய அளவிலான கராத்தே போட்டியில், வெண்கலம் வென்ற சிவேஷை, பள்ளி முதல்வர் புருஷோத்தமன், ஸ்காய் அகாடமி கராத்தே பயிற்சியாளர் சியான் ஜி.கஜேந்திரன் மற்றும் பெற்றோர் பாராட்டினர்.