பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா, குரூர் கிரா மத்தை சேர்ந்த கிருஷ்ணசாமியின் மனைவி பாக்கியலட்சுமி (60). கிருஷ்ணசாமி குடிநீர் தொட்டி இயக்குனராக வேலை பார்த்து வருகிறார். வழக்கம்போல் அவர் பணிக்கு சென்றபோது, அவரது மனைவி பாக்கியலட்சுமியும் அவருடன் சென்றார். அப்போது அங்கிருந்த வீட்டு மனைகளை பார்த்துக் கொண்டிருந்த அவர், திடீரென அப்பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தார். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார்,பாக்கியலட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோத னைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வரு கின்றனர்