விநாயகர் சிலைகளை கொலு வைக்க வாங்கி செல்லும் பக்தர்கள்

குமாரபாளையத்தில் விநாயகர் சிலைகளை கொலு வைக்க பக்தர்கள் பெருமளவில் வாங்கி செல்கின்றனர்.

Update: 2024-09-01 14:48 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் விநாயகர் சிலைகளை கொலு வைக்க பக்தர்கள் பெருமளவில் வாங்கி செல்கின்றனர். விநாயகர் சதுர்த்தி விழா செப். 7ல் நடைபெறவுள்ளது. இந்நாளில் குமாரபாளையம் நகரம் மற்றும் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் பெரிய அளவிலான விநாயகர் சிலைகள் கொலு வைக்கப்பட்டு பக்தர்கள் வழிபாடு செய்து, 3,5,7 ஆகிய நாட்களுக்கு பிறகு, கொலு வைக்கப்பட்ட விநாயகர் சிலைகளை காவிரி ஆற்றில் விட்டு வருவது வழக்கம். இந்த ஆண்டு விநாயகர் சிலைகள் கொலு வைப்பதற்காக, சிறிய அளவிலான சிலைகள் முதல் பெரிய அளவிலான சிலைகள் வரை விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது. இவைகளை பக்தர்கள் நேற்று சிலைகள் விற்கும் கடைகளிலிருந்து பெருமளவில் சரக்கு வாகனத்தில் ஏற்றியவாறு, தங்கள் இடங்களுக்கு வாங்கி சென்றனர். இன்று அமாவாசை என்பதால் கொலு வைத்து விநாயகர் சதுர்த்தி வழிபாட்டினை துவக்க ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Similar News