கல்பாடி கிராம பொதுமக்கள் ஆட்சியரகம் முன்பு ஆர்ப்பாட்டம் செய்து மனு

கல்பாடி கிராமத்தில் மலைக் குவாரிக்கு ஏலம் விடுவதை தடுத்து நிறுத்த வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் ஆட்சியரிடம் மனு ...

Update: 2024-09-02 13:24 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பெரம்பலூர் மாவட்டத்தில் அதிகாமான மலைகள் உள்ளதால் , இந்த மலைகள் குவாரிகளுக்காக தனியாருக்கு உரிமை வழங்கப்பட்டு கற்கள் வெட்டி எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பெரம்பலூர் அருகே உள்ள க.எறையூர், கல்பாடி, எறையசமுத்திரம், எசனை உள்ளிட்ட பல கிராமங்களில் உள்ள மலைப் பகுதிகள் குத்தகைக்கு விடப்பட்டு கட்டுமான பணிகளுக்கு தேவையான கற்கள், ஜல்லி எம்.சாண்ட், பி.சாண்ட் உள்ளிட்டவைகள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு மலைகளை கல்குவாரிகளாக மாற்றும் போது மலைகளை உடைக்க வைக்கப்படும் வெடிகளாலும் அருகே செயல்பட்டு வரும் கிரஷர்களாலும் ஏற்படும் புழுதிகளால் பொதுமக்களுக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டு வருவதாகவும், மேலும் கிராமப் பகுதிகளில் அதிவேகமாகவும் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவில் பாரம் ஏற்றப்பட்டு லாரிகள் செல்வதாலும் வீடுகளில் விரிசல் ஏற்படுவதோடு, தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் தற்போது மீதமுள்ள பகுதிகளையும், புதிதாக கல்குவாரிக்கு ஏலம் விடப்படுவதாக தகவல் வெளியானதை தொடர்ந்து இருக்கின்ற குவாரிகள் மற்றும் கிரஷர்களால் தாங்கள் பாதிக்கப்பட்ட நிலையில் புதிதாக குவாரிகளுக்கும் கிரஷர்களுக்கும் அனுமதி வழங்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் இன்று, பொதுமக்கள் குறை தீர்க்கும்நாள் கூட்டத்தில் ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர், மனுவை பெற்ற ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

Similar News