கண்மாயிகளில் மரங்களை நட்டு பராமரிக்கும் அரசுப்பள்ளி மாணவன்
கண்மாயிகளில் மரங்களை நட்டு பராமரிக்கும் அரசுப்பள்ளி மாணவன்;
புதுக்கோட்டை திருவள்ளுவர் நகரை சேர்ந்த அரசுப்பள்ளி ஆசிரியரின் மகன் ஆதவன் இவர் புல்வயலில் உள்ள அரசு பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். இவர் தந்தையுடன் இணைந்து கடந்த மாதம் வயலோகம் பெரிய கண்மாயில் 2 ஆயிரம் பனை விதைகளை நட்டுள்ளனர். அதனை தொடர்ந்து இன்று புல்வயல் கிராமம் நெறிகிப்பட்டி கண்மாயில் 50 மரக்கன்றுகளை நட்டார். அப்பகுதியினர் இவரை பாராட்டி வருகின்றனர்