தூய்மை காவலர்களுக்கு உதவிய சமூக ஆர்வலர்கள்
நொச்சி ஓடைப்பட்டியில் தூய்மை காவலர்களுக்கு உதவிய சமூக ஆர்வலர்கள்
திண்டுக்கல் நொச்சி ஓடைப்பட்டியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பால் தாமஸ் ஏற்பாட்டில், தூய்மை காவலர்களுக்கான உணவுப் பொருட்கள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அனுகிரகா கல்லூரி முன்னாள் முதல்வர் முனைவர்.ஐசக், வணிகவரித்துறை முன்னாள் இணை ஆணையர் (ஓய்வு) தேவநாதன், ஜி டி என் கல்லூரி பேராசிரியர் முருகானந்தம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். உறவின் சந்திப்பு நிகழ்ச்சியில் சமூக சேவையில் பங்கேற்று வரும் ரயில்வே பாதுகாப்பு படை வீரர் இம்மாணுவேல், போக்குவரத்து காவல்துறை சிறப்பு ஆய்வாளர் அமிர்தராஜ் மற்றும் தன்னார்வலர்கள் தினேஷ், சரவணன், குமார் ஆகியோருக்கு நமது விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும் இந்நிகழ்ச்சியில், திண்டுக்கல் ரயில் நிலையத்தில் தூய்மை காவலர்களாக பணியாற்றி வரும் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளோருக்கு உணவுப் பொருட்களை சமூகப் பணி ஆல்பர்ட், சுகாதார ஆய்வாளர் முனியப்பன், முன்னாள் ராணுவ வீரர் மாறவர்மன் ஆகியோர் வழங்கினர். அனுகிரகா கல்லூரி முன்னாள் முதல்வருக்கு இந்நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்களால் நல்ல ஆசான் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. மேலும் இது போன்ற சிறந்த பணிகளில் தன்னை அர்ப்பணித்து வரும் சமூக ஆர்வலர் பால்தாமஸுக்கு சிறப்பு விருந்தினர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் ஆகியோர் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்தனர்.