அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் கேட்டு மனு

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகள் இன்றி நோயாளிகள் தவித்து வருவதாக மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு.

Update: 2024-09-03 03:10 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் சார்பாக மாவட்ட செயலாளர் முகமது ரிஜால் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது அந்த மனுவில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் அரசு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது இந்த மருத்துவமனைக்கு தேனி மாவட்டம் காட் ரோடு பகுதியில் இருந்தும் செம்பட்டி பகுதிகளில் இருந்தும் மலை கிராம பகுதிகளில் இருந்தும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் இந்த மருத்துவமனையில் குடிநீர், படுக்கை வசதி, போதுமான மருத்துவர்கள் இன்றி காணப்படுவதாலும் மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு இன்பச் சுற்றுலா வரக்கூடிய சுற்றுலாப் பயணிகள் விபத்துக்குள்ளாகும் பொழுது அவர்களை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அல்லது திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லக்கூடிய சூழ்நிலை உள்ளதால் சில நேரங்களில் உயிர் இழப்புகள் ஏற்படக்கூடிய நிலை ஏற்படுகிறது. எனவே மாவட்ட நிர்வாகம் திண்டுக்கல் மாவட்டத்தில் முக்கிய அரசு மருத்துவமனையாக செயல்படக்கூடிய வத்தலகுண்டு அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி பல உயிர்களை காப்பாற்ற உதவிட வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

Similar News