வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை

திண்டுக்கல் நேதாஜி நகரில் வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் கடையில் வியாபாரி தூக்கிட்டு தற்கொலை

Update: 2024-09-03 04:43 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல், சந்தைப்பேட்டை ரோடு, நேதாஜிநகர் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி மகன் சரவணப்பெருமாள் வயது 45 இவர் அதே பகுதியில் ஸ்ரீராம் ஹார்டுவேர் என்ற கடையை நடத்தி வந்தார். இந்நிலையில் வியாபாரத்தில் ஏற்பட்ட நஷ்டத்தால் மன உளைச்சலில் கடையில் கயிறால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திண்டுக்கல் நகர் தெற்கு காவல் நிலைய ஆய்வாளர் ராஜசேகர் தலைமையில் சார்பு ஆய்வாளர் முனியாண்டி மற்றும் காவலர்கள் சரவணபெருமாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Similar News