பிரத்யங்கரா தேவிக்கு நிகும்பலா சிறப்பு யாகம்

சின்னாளபட்டி ஸ்ரீஅண்ணாமலையார் கோவிலில் அமாவாசையை முன்னிட்டு பிரத்யங்கரா தேவிக்கு நிகும்பலா சிறப்பு யாகம் . பல்வேறு மாவட்டத்தில் இருந்து பக்தர்கள் யாகத்தில் பங்கேற்றனர்.

Update: 2024-09-03 04:45 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி வடக்குத் தெருவில் உள்ளது ஸ்ரீஉண்ணாமுலை சமேத அண்ணாமலையார் திருக்கோவில். ஒவ்வொரு மாதமும் அமாவாசையை முன்னிட்டு பகல் 12 மணியளவில் அம்மனுக்கு நிகும்பலா மகா யாகம் நடைபெறுவது வழக்கம். ஆவணிமாத அமாவாசை முன்னிட்டு காலை 10 மணியளவில் பிரத்யங்கிரா தேவி கோவில் முன்பு உள்ள யாக குண்டத்தில் அரசு பலா, தேக்கு, சந்தனம், தேக்கு சமித்துகள், போடப்பட்டு நெய் ஊற்றி அக்கினி மூட்டப்பட்டு சிறப்பு யாகம் ஆரம்பமானது பின்பு, வேத விற்பனர்கள் மந்திரம் ஓத பகல் 12.30 மணியளவில் மூட்டை, மூட்டையாக மிளகாய், எலுமிச்சை, மாதுளை, பலாசுழை, வில்வப்பழம், திராட்சைபழம், தேன், ஆகியவை யாகத்தில் போடப்பட்டது. பின்னர், பிரத்யங்கிரா தேவிக்கு பால், தேன், தயிர், பன்னீர், மாபொடி, திரவியபொடி, குங்குமம், சந்தனம், மஞ்சள், அரிசிமாவு, பஞ்சாமிர்தம் உட்பட 16வகை அபிஷேகங்கள் நடைபெற்று அதன்பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. யாகத்திற்கான பூஜைகளை சிவாச்சாரியாரும், தெத்துப்பட்டி ராஜகாளியம்மன் கோவில் தலைமை குருக்களுமான சிவஸ்ரீ ஜவஹர் (எ) சதாசிவ குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் சிறப்பாக செய்திருந்தனர். ஸ்ரீ உண்ணாமுலை சமேத அண்ணாமலையார் திருக்கோயில் நிர்வாக கமிட்டியைச் சேர்ந்த திரைப்பட நடிகர் நம்பிராஜன், சமயநாதன் , ஹார்டுவேர்ஸ் கணேசன், சிவகாமிநாதன் , உட்பட நிர்வாக கமிட்டியார்கள் பலர் சிறப்பாக செய்திருந்தனர். இந்த யாகத்திற்கு திண்டுக்கல், மதுரை, தேனி, வத்தலக்குண்டு, போடி, கம்பம், பழனி ஆகிய ஊர்களில் இருந்து நூற்றுக்கணக்கான பக்தர்கள் வருகைதந்து அம்மனை தரிசனம் செய்தனர். கோவில் கமிட்டி சார்பாக நிகும்பல யாகத்தில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு அண்ணதானம் வழங்கப்பட்டது.

Similar News