விநாயகர் சிலை ஊர்வலம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம்
பழனியில் விநாயகர் சிலை ஊர்வலம் தொடர்பாக கோட்டாச்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது
இந்தியா முழுவதும் வரும் செப்டம்பர் மாதம் 7 ம்தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. விநாயகர் சதுர்த்தியை ஒட்டி தமிழகம் முழுவதும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு ஊர்வலமாக சென்று நீர்நிலைகளில் கரைக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான ஆலோசனைக்கூட்டம் பழனி கோட்டச்சியர் சரவணன் தலைமையில் நடைபெற்றது. பழனி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் செப்டம்பர் 13, 14ஆம் தேதியில் இரண்டு நாட்கள் ஊர்வலம் நடைபெற உள்ளது அது சம்பந்தமாக இந்த ஆலோசனைக் நடந்தது. பழனி வட்டாட்சியர் சக்திவடிவேலன் , பழனி டிஎஸ்பி் தனஞ்ஜெயன் , ஒட்டன்சத்திரம் டிஎஸ்பி முருகேசன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். விநாயகர் சிலை வைக்கும் போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள், சிலை ஊர்வலம் செல்லும் பாதைகள், ஊர்வலம் செல்லும் நேரம் ஆகியவை குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது. இந்துமுன்னனி, சிவசேனா, விஷ்வ இந்து பரிஷத் உள்ளிட்ட இந்து அமைப்புகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.