தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

Update: 2024-09-04 04:11 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
சின்னசேலம் துணை வட்ட ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு நில அளவை அலுவலகம் ஒன்றிப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் களப்பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்க கோரியும், கண்ணிய குறைவாக நடந்து கொள்வதுடன், ஊழியர் விரோத போக்கை கடைபிடிக்கும் சின்னசேலம் வட்ட துணை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Similar News