கள்ளக்குறிச்சி மந்தைவெளி மற்றும் நான்குமுனை சந்திப்பு பகுதியில் எஸ்.பி., ஆய்வு மேற்கொண்டார்.விநாயகர் சதுர்த்தியையொட்டி கள்ளக்குறிச்சி நகர பகுதியில் 15க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்படுவது வழக்கம்.தொடர்ந்து, 3 நாட்கள் தினமும் சுவாமிக்கு ஆராதணை நடைபெறும். 3 வது நாள் விநாயகர் சிலைகள் அனைத்து மந்தைவெளிக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து ஊர்வலம் தொடங்கும். விநாயகர் சிலைகளை வாகனங்களில் ஏற்றிக்கொண்டு மந்தைவெளியில் இருந்து கச்சிராயபாளையம் ரோடு, நான்குமுனை சந்திப்பு, சேலம் சாலை வழியாக ஊர்வலமாக கோமுகி ஆற்றுக்கு கொண்டு செல்லப்படும். இதையொட்டி, கள்ளக்குறிச்சி மந்தைவெளி மற்றும் நான்குமுனை சந்திப்பு பகுதியில் எஸ்.பி., ரஜத்சதுர்வேதி ஆய்வு மேற்கொண்டார். விநாயகர் சிலைகள் வைக்கப்படும் இடம், ஊர்வலமாக கொண்டு செல்லப்படும் வழியை பார்வையிட்டு, சரியான நேரத்தில் சிலைகள் எடுக்க வேண்டும், சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் போலீசார் செயல்படவேண்டும் என்பது உட்பட பல்வேறு செயல்பாடுகள் குறித்து எஸ்.பி., ரஜத்சதுர்வேதி அறிவுறுத்தினார். அப்போது, டி.எஸ்.பி., தேவராஜ் உட்பட போலீசார் பலர் உடனிருந்தனர்.