வ.உ.சி சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை
திண்டுக்கல் காட்டாஸ்பத்திரி அருகே வ.உ.சி சிலைக்கு பல்வேறு கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்
திண்டுக்கல் காட்டாஸ்பத்திரி அருகே அமைக்கப்பட்டுள்ள சுதந்திரப்போராட்டவீரர் , செக்கிழுத்தசெம்மல் , கப்பலோட்டிய தமிழன் வ .உ.சிதம்பரனார் 153 வது பிறந்த நாளையொட்டி வ.உ.சி உருவ சிலைக்கு திமுக சார்பில் கிழக்கு மாவட்ட செயலாளர் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐபி செந்தில் குமார் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார், உடன் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதி பிரகாஷ் துணை மேயர் ராஜப்பா தெற்கு ஒன்றிய செயலாளர் வெள்ளிமலை ஒன்றிய தலைவர் ராஜா கிழக்கு மாவட்ட துணை தலைவர் பிலால் உசேன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத் தொடர்ந்து அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன் நத்தம் விஸ்வநாதன் ஆகியோர் வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன் மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவர் ராஜமோகன் முன்னாள் மாநகராட்சி மேயர் மருதராஜ் உள்ளிட்ட கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதனைத்தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சியினர், சமூக அமைப்பினர், வர்த்தகர்கள், பொதுமக்கள் என கப்பலோட்டிய தமிழன் வ .உ. சிதம்பரனார் சிலைக்கு மரியாதை செலுத்தினர். மேலும் இந்நிகழ்வில் பல்வேறு தரப்பினர் பேசியதாவது ஆங்கிலேயன் ஆட்சி காலத்தில் ஆங்கிலேயரை எதிர்த்து நாட்டுப்பற்றுடன் வ. உ. சிதம்பரனார் கப்பலோட்டி தமிழர்களின் பெருமையும், துணிச்சலையும் பறைசாற்றியவர் , சுதந்திரத்திற்காக சிறைசென்று செக்கிழுத்து பாடுபட்டவர் , அவரை ஒருபோதும் யாரும் மறக்காமல் அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் அவரது பிறந்தநாள் விமர்சையாக கொண்டாடப்படுகிறது என தெரிவித்தனர்,