கரூரில் மாவட்ட நெல் & அரிசி மொத்த வியாபாரிகள் சங்க புதிய கட்டிட திறப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கரூர்- மதுரை பைபாஸ் சாலையில் உள்ள கரூர் வணிக வளாகத்தில், இன்று கரூர் மாவட்ட நெல் மற்றும் அரிசி மொத்த வியாபாரிகள் சங்கத்தின் கரூர் புதிய கட்டட திறப்பு விழா வெகு விமர்சையாக நடைபெற்றது. புதிய கட்டிடத்தை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில துணைத்தலைவர் கந்தசாமி திறந்து வைத்தார். இதே போல புதிய கட்டிடத்தில் அலுவலகத்தை தமிழக அரசு வணிகர்கள் நலவாரிய உறுப்பினரும், கரூர் மாவட்ட வர்த்தகம் மற்றும் தொழிற்கழகத்தின் செயலாளருமாகிய லயன் கே எஸ் வெங்கட்ராமன் திறந்து வைத்தார். கரூர் மாவட்ட வர்த்தகம் மற்றும் தொழிற் கழகத்தின் தலைவர் வழக்கறிஞர் ராஜு கல்வெட்டை திறந்து வைத்தார். வணிக வளாக மண்டி கடை கரூர் வர்த்தக கழகத்தின் செயலாளர் முருக கணபதி நிறுவனர்களின் படத்தை திறந்து வைத்தார். சங்கத்தின் பொருளாளர் சம்பத், துணைத் தலைவர் கோவிந்தராஜ், துணை செயலாளர் சக்திவேல் ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வைத்து புதிய கட்டிட திறப்பு விழாவை சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியில் சங்கத்தின் நிர்வாக குழு,செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், கரூர் மாவட்ட நெல்,அரிசி மொத்த வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசுகள் வழங்கி சங்கத்தின் சார்பில் வாழ்த்துக்கள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும் காலை சிற்றுண்டி வழங்கி சிறப்பித்தனர்.