தொடக்கப்பள்ளிக்கு திமுக சார்பில் இலவச இருக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி.

கவுண்டிபாளையம் அரசு தொடக்கப்பள்ளிக்கு வடக்கு ஒன்றிய திமுக சார்பில் இலவச இருக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.;

Update: 2025-12-17 14:51 GMT
பரமத்தி வேலூர், டிச:17- நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பரமத்தி ஊராட்சி ஒன்றியம் நல்லூர் ஊராட்சி கவுண்டிபாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் பயிலும் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பரமத்தி வடக்கு ஒன்றிய திமுக சார்பில் இலவச இருக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பரமத்தி ஒன்றிய கழக செயலாளர் பி. பி. தனராசு தலைமை வகித்தார்.நல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மதியழகன் முன்னிலை வகித்தார். பள்ளி தலைமை ஆசிரியர் அனைவரையும் வரவேற்றார்.மாணவர்களுக்கு இலவச இருக்கைகள் வழங்கும் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்எல்ஏவும் ,நாமக்கல் மேற்கு மாவட்ட திமுகழக பொறுப்பாளருமான கே.எஸ்.மூர்த்தி கலந்துகொண்டு கவுண்டிபாளையம் அரசு தொடக்கப்பள்ளி மாணவ ,மாணவிகளுக்கு இருக்கைகளை வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட, ஒன்றிய ,கிளைக் கழக பொறுப்பாளர்கள், பல்வேறு அணி பொறுப்பாளர்கள், மகளிர் அணி பொறுப்பாளர்கள் ,பொதுமக்கள்,சமூக ஆர்வலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

Similar News