திருச்சி ஸ்ரீ அருள்மிகு ஜெகதாம்பிகை உடனுறை ஸ்ரீ அருள்மிகு பூலோகநாதர் திருக்கோவிலில் பிரதோஷ வழிபாடு!!

திருச்சி ஸ்ரீ அருள்மிகு ஜெகதாம்பிகை உடனுறை ஸ்ரீ அருள்மிகு பூலோகநாதர் திருக்கோவிலில் இன்று பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக நடைபெற்றது.;

Update: 2025-12-17 14:39 GMT

திருச்சி மாவட்டம் கீழரன் சாலையில் அமைந்துள்ள வாஸ்து ஸ்தலமான ஸ்ரீ அருள்மிகு ஜெகதாம்பிகை உடனுறை ஸ்ரீ அருள்மிகு பூலோகநாதர் திருக்கோவிலில் இன்று பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக நடைபெற்றது. அதிகார நந்தி பெருமாளுக்கு சிறப்பு பூஜையும் அலங்காரமும் நடைபெற்றது. இக்கோவிலானது நூறு வருடத்திற்கும் மேல் பழமை வாய்ந்த கோவிலாகும். இக்கோவிலானது வாஸ்து ஸ்தலமாகும். வீடு மற்றும் வீட்டு மனை சார்ந்த தோஷங்களை போக்கும் வாஸ்து தளமாகும். அடுத்த வருடம் 2026 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதால் கோவில் பராமரிப்பு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 

Similar News