அரசு கலை மற்றும் அறிவியல்கல்லூரியில், விழிப்புணர்வு கருத்தரங்கம்
குமாரபாளையம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.;
குமாரபாளையம், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தெரு நாய் மேலாண்மைக் குழுவின் சார்பில் தெருநாய் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் முதல்வர் (பொ) சரவணாதேவி நடந்தது. ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் குமார் அவர்கள் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக குமாரபாளையம், நகராட்சி சுகாதார ஆய்வாளர் சந்தானகிருஷ்ணன் பங்கேற்று பேசினார். இவர், தனது உரையில், வெறிநாய் கடி நோய், ரேபீஸ் என்னும் வைரஸ்களால் ஏற்படுகிறது எனவும் இந்த வைரஸ் பரவும் விதம் குறித்தும், இந்த வைரஸில் இருந்து எப்படி பாதுகாத்துக் கொள்ள வேண்டிய முறை மற்றும் தெருநாய்கள் கடித்து விட்டால் மேற்கொள்ளப்பட வேண்டிய முதலுதவி நடவடிக்கைகள் குறித்தும் மாணவ மாணவியரிடையே எடுத்துரைத்தார். பேராசிரிய பெருமக்கள், மாணவ, மாணவியர் பெருமளவில் பங்கேற்றனர். வேதியல் துறை உதவிப் பேராசிரியர் கோவிந்தராஜூ நன்றி கூறினார்.