விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலையை கரைக்கும் நடவடிக்கைகளை குறித்து மாவட்ட ஆட்சியர் ஆய்வு.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மருத்துவர் ச.உமா, மோகனூர் மற்றும் வேலூர் காவிரி ஆற்றின் படித்துறையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகளை கரைக்க மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு.
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மோகனூர் மற்றும் வேலூர் காவிரி ஆற்றின் படித்துறையில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிலைகளை கரைக்க மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு 28.8.2024 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ராஜேஸ்கண்ணன், முன்னிலையில் விநாயகர் சதுர்த்தி விழா தொடர்பான ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விநாயகர் சிலைகளை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களால் அடையாளமிடப்பட்டு குறிப்பிடப்பட்டுள்ள இடங்களில் மட்டும் கரைத்திட வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில் குமாரபாளையம், பள்ளிபாளையம், மோகனூர், பரமத்தி வேலூர் ஆகிய நான்கு இடங்களில் உள்ள ஆற்றுப்பகுதி படித்துறைகளில் போதுமான அளவு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் விநாயகர் சிலைகளை கரைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள மோகனூர் மற்றும் பரமத்தி வேலூர் காவிரி கரையோர பணித்துறைகளில் வாகன நிறுத்தமிடம், பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டுள்ள தடுப்புகள், சிலை கரைக்க தேர்வு செய்யப்பட்டுள்ள இடம், அறிவிப்புகளை செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள ஒலிபெருக்கி, பாதுகாப்பு கண்காணிப்பிற்காக அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமரா, கூடுதல் வெளிச்சத்திற்காக அமைக்கப்பட்டுள்ள மின்விளக்கு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, வட்டாட்சியர்கள் .மணிகண்டன், முத்துக்குமார், பேரூராட்சி செயல் அலுவலர் கலைராணி, .சோமசுந்தரம் ஆகியோர் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.