விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்.

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

Update: 2024-12-26 13:37 GMT
திருவாரூர் மாவட்டத்தில் மாதம் தோறும் நான்காவது வியாழக்கிழமை அன்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறுவது வழக்கம். இந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். வேளாண்மை துறை சார்பில் விவசாயிகளுக்கு பயிர்களில் ஏற்படும் பூச்சித் தாக்கம் கட்டுப்படுத்தும் முறை குறித்து கூட்டத்தில் விவசாயிகளுக்கு எடுத்துரைக்கப்பட்டது மேலும் விவசாயிகள் கோரிக்கைகள் மற்றும் குறைகளை மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களாக அளித்தனர்

Similar News