ஊத்தங்கரை அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் விஷப்பாம்பு.

ஊத்தங்கரை அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் விஷப்பாம்பு.

Update: 2024-12-27 02:27 GMT
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்துள்ள சிங்காரப்பேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று மருந்து வழங்கும் இடத்தில் காலியாக வைக்கப்பட்டிருந்த மாத்திரை பெட்டியில் கட்டுவிரியன் பாம்பு பதுங்கி இருந்தது. இதனை கண்ட நோயாளிகள் அங்கிருந்த ஓட்டம் பிடித்தனர். பின்னர் அங்கிருந்தவர்கள் உதவியுடன் பாம்பை பிடித்து சிங்காரப்பேட்டை காப்புகாட்டில் பத்திரமாக விடுவித்தனர். இதனால் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் நிம்மதி அடைந்தனர்.

Similar News