முன்னாள் பிரதமர் மறைவிற்கு திமுகவினர் அஞ்சலி.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக திருவாரூர் திமுக நகர குழு சார்பில் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
இந்திய குடியரசின் 13 வது பிரதமராக பத்தாண்டுகள் தொடர்ந்து இந்திய நாட்டின் வளர்ச்சிக்காக பணியாற்றியவர். உலகத்தில் தலைசிறந்த பொருளாதார வல்லுநர்களில் ஒருவருமான அன்பு அமைதிக்கு இலக்கணமாக பன்முகத் தன்மை கொண்ட மாண்புமிகு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். நாடு முழுவதும் பல்வேறு தரப்பினரும் புகழஞ்சலி செலுத்தி வரும் நிலையில் திருவாரூர் திமுக நகர குழு சார்பில் மன்மோகன் சிங் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. திருவாரூர் திமுக நகர செயலாளர் வாரை பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் திமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் திரு உருவப்படத்திற்கு மழை தூவி அஞ்சலி செலுத்தினர்.