விருத்தாசலத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது;

Update: 2024-12-27 17:58 GMT
விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்டத் தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் லெனின் கோரிக்கைகளை விளக்கி பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரகு, வட்ட இணை செயலாளர் பாண்டியன் ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள். சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் சின்னசாமி, அனைத்து துறை ஓய்வுதிய சங்க மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் வட்ட பொருளாளர் நாகராஜ் நன்றி கூறினார். இதில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். சிறப்பு காலமுறை ஊதியம், தொகுப்பூதியம், மதிப்பூதியம் பெறும் 3.5 லட்சம் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியமும் ஓய்வூதியமும் வழங்கிட வேண்டும். அரசுத் துறையில் உள்ள அனைத்து காலி பணியிடங்களையும் காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News