ராமநாதபுரம் புகையிலை சம்பந்தமான புகார்கள் குறித்து அரசு அதிகாரிகள் ஆய்வு
கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது குறித்து ஆய்வு நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் தொடர்பான திடீர் ஆய்வு சாந்தி உதவி ஆணையர், ராமநாதபுரம், அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் முருகேசன் (கோட்ட ஆய அலுவலர்) ராமநாதபுரம், கீழக்கரை நகராட்சி சுகாதார ஆய்வாளர் பரக்கத்துல்லா, நகர வருவாய் ஆய்வாளர் வித்யா, மற்றும் நகராட்சி பணியாளர்கள் ஆய்வில் உடன் இருந்தனர்.