சர்க்கரை ஆலை சிறப்பு அரவையை ஆட்சியர் துவக்கி வைத்தார்

வைத்தார்

Update: 2024-09-07 18:29 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
கள்ளக்குறிச்சி-I கூட்டுறவு சர்க்கரை ஆலை சிறப்பு அரவைப் பருவம் மற்றும் முதன்மை அரவைப் பருவத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், தொடங்கி வைத்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம், மூங்கில்துறைப்பட்டு கள்ளக்குறிச்சி-1 கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 2023-2024ஆம் ஆண்டு சிறப்பு அரவைப் பருவம் மற்றும் 2024-2025ஆம் ஆண்டு முதன்மை அரவைப் பருவத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் எம்.எஸ்.பிரசாந்த், தொடங்கி வைத்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம், வானாபுரம் வட்டம், மூங்கில்துறைப்பட்டு ஊராட்சியில் அமைந்துள்ள கள்ளக்குறிச்சி-1 கூட்டுறவு சர்க்கரை ஆலையில் ஒவ்வொரு நிதியாண்டும் கரும்பு அரவைப் பருவம் தொடங்கப்பட்டு, ஆலையின் சுற்றுவட்டாரப் பகுதியில் விவசாயம் செய்யப்பட்டு, ஆலையில் பதிவு செய்யப்பட்டுள்ள கரும்பு பயிர்களை அரவை செய்து பல்வேறு சர்க்கரை, வெல்லம் உள்ளிட்ட பல்வேறு உற்பத்தி பொருட்கள் தயார் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த 2024-2025ஆம் ஆண்டிற்கான முதன்மை கரும்பு அரவைப் பருவத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்து, ஆலையின் கரும்பு அரவை மற்றும் சர்க்கரை உற்பத்திப் பகுதிகளை ஆய்வு செய்தார்கள். மேலும், இவ்வாலையில் நிறுவப்பட்டுள்ள இணைமின் நிலையத்தை முழுவதுமாக ஆய்வு செய்து, இணைமின் திட்டப் பணிகளை விரைந்து முடித்து உரிய காலத்தில் இயக்கத்திற்குக் கொண்டுவர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

Similar News