திருக்கோவிலூர் விநாயகர் சிலை ஊர்வலம் பாதையை எஸ்.பி ஆய்வு விநாயகர் சதுர்த்தியையொட்டி திருக்கோவிலூர் நகராட்சி பகுதியில் ஆண்டுதோறும் 20- க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைத்து வழிபாடு நடைபெறும். வழிபாடு முடிந்த பிறகு விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அரகண்டநல்லூர் அந்திலி ஏரியில் கரைக்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டு நடைபெறும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் அசம்பாவித சம்பவங்களை தடுக்க கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி ஊர்வல பாதையை நேற்று ஆய்வு செய்தனர். திருக்கோவிலூர் ஏரிக்கரை சாலை, ஐந்து முனை சந்திப்பு ,நான்கு முனை சந்திப்பு ஆகிய இடங்களை ஆய்வு செய்தனர்.ஆய்வின் போது எங்கெங்கு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆய்வின்போது டிஎஸ்பி பார்த்திபன், காவல் ஆய்வாளர் பாலகிருஷ்ணன், போக்குவரத்து காவல் ஆய்வாளர் சத்தியன் ஆகியோர் உடன் இருந்தனர்.