கோவை- கரூர் சாலையில் சாலையை கடந்து செல்லும் போது வேகமாக வந்த கார் மோதி இரண்டு பெண்கள் படுகாயம்.
கோவை- கரூர் சாலையில் சாலையை கடந்து செல்லும் போது வேகமாக வந்த கார் மோதி இரண்டு பெண்கள் படுகாயம்.
கோவை- கரூர் சாலையில் சாலையை கடந்து செல்லும் போது வேகமாக வந்த கார் மோதி இரண்டு பெண்கள் படுகாயம். திருப்பூர் மாவட்டம், தாராபுரம், நாகம்பாளையம் அருகே உள்ள தொட்டியம் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி வயது 37. இவரது மனைவி ஜோதிமணி வயது 34. இவரது அக்கா சாமியாத்தாள் வயது 48. இவர்கள் மூன்று பேரும் செப்டம்பர் 7ஆம் தேதி மாலை 5 மணி அளவில் கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட கோவை- கரூர் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் எதிரே சாலையை கடந்து நடந்து செல்ல முயன்றனர். அப்போது திருப்பூர் மாவட்டம் வாவிபாளையம், பெருமாநல்லூர் அருகே உள்ள நல்ல கவுண்டன் தோட்டம் பகுதியைச் சேர்ந்த கார்த்திக் வயது 34 என்பவர் வேகமாக ஓட்டி வந்த கார், சாலையை கடந்து சென்ற ஜோதிமணி மற்றும் சாமியாத்தாள் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இருவரையும் மீட்டு தனியார் ஆம்புலன்ஸ் மூலம் அதே சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். சம்பவ தொடர்பாக சுப்பிரமணி அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர், காரை வேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ஓட்டி, விபத்து ஏற்படுத்திய கார்த்திக் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் கரூர் மாநகர காவல் துறையினர்.