திருநெல்வேலி மாவட்டம் சிவந்திப்பட்டியை சேர்ந்தவர் மாடசாமி (42). கட்டிடத் தொழில் செய்து வரும் இவர் கடந்த இரண்டு நாட்களாக வேலைக்கு செல்லவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் வீட்டை விட்டு வெளியேறிய அவர் பூச்சி மருந்து குடித்து வயல் பகுதியில் நேற்று பரிதாபமாக இறந்து கிடந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சிவந்திபட்டி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.