திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் கடந்த 6ஆம் தேதி தொடங்கி நேற்று (செப்.8) இரவுடன் முடிவடைந்த அகில இந்திய அளவிலான மின்னொளி கபடி போட்டியின் நிறைவு நாள் போட்டிகளை தூத்தூக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். இந்த போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று விளையாடியது. இந்த விளையாட்டிற்கான ஏற்பாட்டை திருநெல்வேலி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர் ஜெகதீஷ் செய்திருந்தார். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள்,திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.