கால்வாயில் சாக்கு பையில் காட்டுப்பன்றி உடல் போலீஸ் விசாரணை
பூதப்பாண்டி அருகே
குமரி மாவட்டம் பூதப்பாண்டியை அடுத்த இறச்சகுளம் பகுதி வழியாக அரசியர் கால்வாய் செல்கிறது. இன்று காலை இந்த கால்வாய் வெள்ளத்தில் வெள்ளை நிற சாக்கு பை ஒன்று மிதந்து வந்தது. இதனைப் பார்த்த அந்தப் பகுதி மக்கள் பயத்தில் சாக்கு பையை அவிழ்த்து பார்க்காமல் உடனடியாக பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் மற்றும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று சாக்கு பையை மீட்டு அவிழ்த்து சோதனை செய்தனர். அதில் காட்டுப் பன்றி ஒன்று இறந்த நிலையில் காணப்பட்டது. இதை அடுத்து வனத்துறையினர் காட்டுபன்றியின் உடலை கைப்பற்றினர். சாக்கு பையில் இருந்த காட்டுப்பன்றி வேட்டையாடப்பட்டு சாக்கு பையில் கட்டி வைத்திருந்த போது தவறி தண்ணீரில் விழுந்து அடித்து வரப்பட்டதா?. அல்லது காட்டுப்பண்டியை வேட்டைய மர்ம நபர்கள் யார் என விசாரித்தனர். நேற்று காட்டுப்பன்றி வேட்டைக்குச் சென்ற ராபின்சன் என்பவர் வெடி விபத்தில் உயிரிழந்தார். எனவே வேட்டைக்கு சென்று உயிரிழந்த ராபின்சன், சம்பவத்தில் பிடிபட்ட அஜித் ஆகியோருக்கு இதில் தொடர்பு உள்ளதா எனவும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.