திருநெல்வேலி மாநகராட்சி தச்சநல்லூர் மண்டல நிர்வாக அலுவலர் காசி விஸ்வநாதன் மேயர் அலுவலக நிர்வாக அலுவலராக மாற்றப்பட்டுள்ளார். மேயரின் நேர்முக உதவியாளர் சண்முகநாதன் மைய அலுவலக சி-3 பணியிடத்திற்கு மாறுதல் செய்யப்பட்டுள்ளார். மைய அலுவலக சி-3 பணியிட இளநிலை உதவியாளர் ஹரிஹர புத்திரன் பாளையங்கோட்டை மண்டல வருவாய் உதவியாளராக மாற்றப்பட்டுள்ளார். இந்த உத்தரவு உடனே அமலுக்கு வருவதாக மாநகராட்சி ஆணையர் சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.